2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வாகரையில் பால் சேகரிப்பு நிலையம் திறப்பு

Kogilavani   / 2011 ஜூன் 18 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)
வாகரை ஆலங்குளம் பகுதியில் 1 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கபட்ட பால்சேகரிப்பு நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கபட்டது.

யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட வாகரை பிரதேசத்தில் சுயதொழில் நடவடிக்கைகளை விருத்திசெய்ய கால்நடை அபிவிருத்தி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒருக்கட்டமாகவே அமெரிக்க யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இக்கட்டிடம் நிர்மாணிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட மில்கோ பிராந்திய முகாமையாளர் கே.கனகராஜா தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், மில்கோ தலைவர் சுனில் விக்ரமசிங்க, வாகரை பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் கே.ஜதீஸ்குமார் யு.எஸ்.எயிட் பிராந்திய இணைப்பாளர் ஆசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனூடாக சுமார் 250 குடும்பங்கள் நாளாந்த வருமானத்தை அதிகரித்துக்கொள்வதுடன் ஆலங்குளம், மாங்கேணி, காயங்கேணி, மதுரங்குளம், ஓமடியாமடு, குஞ்சாங்குளம, ஊரியன்மடு ஆகிய 8 கிராமங்கள் இதனால் நன்மையடையவுள்ளதாக முகாமையாளர் கனகராஜா மேலும் தெரிவித்தார்

இதன்போதுபால் சேகரிப்பாளர்களுக்கு கொள்கலன்களும் வழங்கப்பட்டன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .