Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 23 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட சர்ச்சைகளினால் பாடசாலை நடைபெறாத நாட்களுக்கான பதில் பாடசாலை நடாத்தப்பட வேண்டுமென கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் அறிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையினை சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது...
கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற உள்ளக இடமாற்றம், வெளிமாவட்ட இடமாற்றம் காரணமாக சில கல்வி வலயங்களில் இவ் இடமாற்றங்களை நிறுத்துமாறு கோரி மாணவர்களை தூண்டிவிட்டு பாடசாலைகள் நடைபெறாத வகையில் சில கல்வி வலயங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இதனால் பாடசாலைகள் இயங்காதபோதிலும் ஆசிரியர்கள் தமது ஒப்பந்தத்தை இட்டுவிட்டு கடமையில் இருந்துள்ளனர். ஆனால் மாணவர்களின் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வருட ஆரம்பத்தில் எற்பட்ட வெள்ள நிலைமை காரணமாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாகவும் பாடசாலை நாட்கள் இழக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான தடைகள் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தினை உருவாக்கி வருகிறது. எனவே அண்மையில் இடமாற்றத்தினால் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத பாடசாலைகளில் பதில் பாடசாலைகள் இடம்பெறவேண்டும். இதனை வலயக்கல்வி பணிப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.
இதேவேளை மேற்படி ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் இவ்வருடம் டிசெம்பர் 31ஆம் திகதிவரை ஐனாதிபதியின் பணிப்புரைக்கமைய இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
27 minute ago
35 minute ago
Parent Friday, 24 June 2011 05:38 AM
Any objection ? உண்மையில் நல்ல முடிவுதான். கல்வி என்பதும் , கற்பிப்பது என்பதும் மாணவர்களின் உரிமை. இதனை யாராலும் பறித்தெடுக்க முடியது. ஆர்ப்பாட்டங்களின் மூலம் பாதிக்கப்பட்டது மாணவர்களின் கல்வியே தவிர ஆர்ப்பாட்டத்தை தூண்டியவார்கள் அல்ல. தயவுசெய்து பாடசாலை நடாத்த வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் எடுக்க வேண்டாம். எமக்கு முதல் எமது முதிய ஆசிரியர்கள் மிக மிகக் கண்ணியமாக தொழிலை செய்தார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
27 minute ago
35 minute ago