Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூலை 16 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி,ஜிப்ரான்)
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 64ஆவது சிரார்த்த தினத்தையொட்டி, மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த முத்தமிழ் விழா இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை மட்டக்களப்பு நீதிமன்றதிற்கு முன்பாகவிருந்து விழா மண்டபம் வரை ஊர்வலம் சென்றதுடன், நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரின் உருவச்சிலைக்கு மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர் மலர்மாலை அணிவித்தார்.
முத்தமிழ் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாநாட்டையொட்டி விபுலானந்த இமயம் என்னும் சிறப்பு மலரும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராசா, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் அதிகாரிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், சமயப்பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.
17 minute ago
20 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
38 minute ago