2021 மே 15, சனிக்கிழமை

மாணவர்களுக்கான கணணி முகாம் பயிற்சி செயலமர்வு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)
மட்டக்களப்பு,   ஏறாவூர் கல்விக் கோட்டத்திற்குள் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கணணி முகாம் பயிற்சி செயலமர்வு இன்று செவ்வாய்க் கிழமை ஏறாவூர் அமீர் அலி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் எஸ்.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளார் எம்.எல்.சகுதுல் நஜீம் கலந்து கொண்டதுடன் தகவல் தொழில் நுட்ப பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் எம்.பி.ரீ.கான் கணணிப் பயிற்சியை நடாத்தினார்.

கல்வி அமைச்சினால் பின்தங்கிய கிராமப்புர பாடசாலை மாணவர்களுக்கு கணணி தொடர்பான அறிவை விருத்தி செய்யும் நோக்கில் கணணி பயிற்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .