Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
கிழக்கின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் காணி கோரும் விண்ணப்பதாரி - தான் நிரந்தரமாக குடியிருக்கும் பகுதிக்குரிய பிரதேச செயலகப் பிரிவினைக் கருத்திலெடுக்காது, காணி கோரும் பிரதேசத்துக்குரிய பிரதேச செயலாளர் பிரிவின் கிராம உத்தியோகத்தரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்குரிய காணித்துண்டொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு பொருத்தமானவர்களைப் பதிவு செய்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கமைவாக இந்தக்கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் 2011.09.16ஆம் திகதி இடப்பட்ட EP/28/LK/ADV/2008/04 எனும் இலக்கம் கொண்ட கிழக்கு மாகாணத்தின் சகல பிரதேச செயலாளருக்குமான கடிதத்தின் மூலம் 2008/04 சுற்று நிருபத்தின் கீழ்- காணி அற்றவர்களைப் பதிவு செய்வது தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்களை வெளியிட்டுள்ளனர்.
இதன் பிரகாரம் காணி கோரும் விண்ணப்பதாரி- தான் நிரந்தரமாக குடியிருக்கும் பகுதிக்குரிய பிரதேச செயலகப் பிரிவினைக் கருத்திலெடுக்காது, காணி கோரும் பிரதேசத்துக்குரிய பிரதேச செயலாளர் பிரிவின் கிராம உத்தியோகத்தரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இதேபோன்றே பிரதேச செயலகப் பிரிவினுள் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவில் குடியிருக்கும் ஒருவர், அதே பிரதேச செயலாளர் பிரிவில் வேறு ஒரு கிராம சேவையாளர் பிரிவில் விண்ணப்பிக்கும் காணி அமையப் பெறின், காணி அமைவிடத்துக்குரிய கிராம அலுவலரிடமே விண்ணப்பத்தினைப் பாரப்படுத்துதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நகரப்பகுதியில் வாழும் காணியற்றவர்கள்- காணி அமைந்திருக்கும் கிராமங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நீங்கள் நகர பிரதேசத்தில் இருந்து காணி கோரி விண்ணப்பித்திருந்தாலும், இதுவரை காணி கிடைக்கப் பெறாவிட்டால், உங்களுக்கு அருகிலுள்ள அரச காணியுள்ள பிரதேச செயலகப் பிரிவில் உங்களுக்குப் பொருத்தமான அல்லது வசதியான கிராம உத்தியோகத்தர் பிரிவைத் தெரிவு செய்து அதற்குரிய கிராம உத்தியோகத்தரிடம் உங்களது விண்ணப்பப் படிவத்தினை 30ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
சகல தமிழ் மக்களும் தமது காணித் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் இச் சந்தர்ப்பத்தினை அனைத்துத் தமிழ் மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்;. விபரம் தெரியாதவர்களுக்கும் அறிவிக்க வேண்டும் எனவும் இரா.துரைரெத்தினம் மேலும் தெரிவித்துள்ளார்.
5 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago