2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாசபைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாசபைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் வழங்கிய ஒலிபெருக்கி சாதனங்களை கையளிக்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாசபை கட்டிடத்தில் அதன் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி உலமாசபை பிரதிநிதிகள், காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாகாண அமைச்சர் சுபைர் ஒலிபெருக்கி பாவனையை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--