2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கைதான பஸ் சாரதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 12 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கைதுசெய்யப்பட்ட குறுந்தூர பஸ்களின் சாரதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பஸ்களின்  சாரதிகளும்  ஊழியர்களும் இன்று புதன்கிழமை பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு குறுந்தூர பஸ்களின் சாரதிகளுக்கும் நெடுந்தூர பஸ்களின்  சாரதிகளுக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினையினால் குறுந்தூர பஸ்களின் சாரதிகள் இருவர் மட்டக்களப்பு பொலிஸாரினால்  கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட சாரதிகளை  விடுவிக்க வேண்டுமெனவும் மட்டக்களப்பில் குறுந்தூர சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்களின்  சாரதிகள் மற்றும்  அதன் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டுமெனவும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் கோரினர்.

இப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையினால் இன்று புதன்கிழமை காலை முதல் பிற்பகல்; வரை மட்டக்களப்பு நகரில் குறுந்தூர பஸ்கள்  சேவையில் ஈடுபடவில்லை. பிற்பகல் இரண்டு மணியளவில் கைதுசெய்யப்பட்ட சாரதிகள் விடுவிக்கப்பட்ட பின்னரே மட்டக்களப்பில் குறுந்தூர பஸ்கள் சேவையில் ஈடுபட்டன.

இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் இரண்டு பேரூந்து சாரதிகளும் விடுவிக்கப்பட்டதையடுத்து தனியார் பேரூந்துக்கள் சேவையில் ஈடுபட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .