2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மக்களை உள்வாங்கிய திண்மக்கழிவு அகற்றும் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாநகர சபையினால் நாடளாவிய ரீதியில் முதற்தடவையாக யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் பொது மக்களையும் உள்வாங்கிய திண்மக்கழிவு அகற்றும் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு பிளாஸ்ரிக் பக்கட் மற்றும் திண்மக்கழிவு அகற்றுவதற்கான வாகனம் என்பவற்றை வைபவரீதியாக கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை சின்ன உப்போடை பிரதேசத்தில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டமானது மாநகரசபையுடன் இணைந்து பொதுமக்களின் பங்களிப்புடன் செயற்படுத்தப்படும் ஒரு விசேட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகஸ்தர், ஏனைய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கொண்ட விசேட குழு ஒன்றும் முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் முகமாக சின்ன உப்போடை, பெரிய உப்போடை மற்றும் சீலாமுனை ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ஏனைய கிராமசேவகர் பிரிவுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--