Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாவட்ட கமநல விழா நாளை காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல உதவி ஆணையாளர் டொக்டர் ஆர்.றுசாந்தன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கமநல சேவைகள் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்எம்.சந்திரசேன, கமநல சேவைகள் அமைச்சின் செயலாளர் உதயனி விக்கிரம சிங்க, கமநல அபிவிருத்தி ஆணையாளர் ரவீந்திரஹேமவிதான, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்தவப்படுத்தும் பிரதி அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வயது முதிர்ந்த விவசாயிகள் கௌரவிப்பு, நிதிவசதி குறைந்த விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கற்றலுக்கான புலமைப்பரிசில் வழங்கல், மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய விவசாயக் கீதம் இயற்றல், குளங்களைப் புணரமைப்பது எவ்வாறு என்ற புத்தக வெளியீடு, சிறப்பாக கடமைபுரிந் கமநல பிரிவுகள் மற்றும் உத்தியோகஸ்தர்களைத் தெரரிவு செய்தல், போன்றனவும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
59 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago