Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திலுள்ள உள்ளூர் மக்களின் போக்குவரத்து பிரச்சினையின் குறைபாடுகளை 'யு.எஸ்.எயிட்' நிறுவனம் இனங்கண்ட நிலையில், இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பழுதடைந்த 5 பஸ் வண்டிகளை திருத்தம் செய்து மீண்டும் மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும்; நிகழ்வும் இயந்திர உபகரணங்களை வழங்கும் நிகழ்வும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாகரை பஸ் டிப்போவில் சாலை முகாமையாளர் ஜீ.மஹிமதர்ஷன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்; கோறளை வடக்கு பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, கிழக்கு மாகாண பிரதம பிராந்திய முகாமையாளர் எம்.என்.எச்.எம்.நசீர், யு.எஸ்.ஏயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப்பணிப்பாளர் ரெமி ஹரிஸ், திட்டப்பிரதிநிதி சாந்தி டுயிவெல், பொலிஸ் பரிசோதகர் ஜ.பி.ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
3 hours ago
9 hours ago
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
29 Jan 2026