2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கணினி பயிற்சியை முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு,  மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நடத்தப்பட்ட கணினி பயிற்சியை முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீர், பயிற்சி உத்தியோகத்தர் எம்.நௌசாத் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஒருவார கால கணினி பயிற்சியை முடித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களுக்க சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--