2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

காணி பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

Super User   / 2011 நவம்பர் 15 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காணி பிரச்சினைகள் தொடர்பாக காத்தான்குடியிலுள்ள பிரமுகர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கமிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்க்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்றது.

இதில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.சுபைர் உள்ளிட்ட சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X