2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தையல் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு தையல் இயந்திரங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 16 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் தையல் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் மட்டக்களப்பு காரியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு தையல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் அருந்தவராஜா,  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் துரை ஆகியோர் இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X