2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கல்வியியற் கல்லூரியின் புதிய மாணவர்கள் சேர்ப்புக்கான நேர்முக பரீட்சை ஆரம்பம்

Super User   / 2011 நவம்பர் 17 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியில் 2012ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை முதல் நடைபெறுவதாக கல்லூரியின் பீடாதிபதி எஸ். பாக்கியராசா தெரிவித்தார்.

கணிதம், விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் சித்திரம் ஆகிய ஐந்து தமிழ் மொழி மூல பாட நெறிகளுக்கான நேர்முக பரீட்சையே நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நேர்முக பரீட்சை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X