Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 நவம்பர் 22 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் அனர்த்தம் தொடர்பான தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வு தொடர்பான குழுவினர், அங்குள்ள அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.
மேற்படி குழுவினர் எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான குழுவினரை கோட்டைக்கல்லாற்றில் நேற்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.
ஐக்கிய நாடுகளின் அனர்த்தம் தொடர்பான தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வுக்குழுவில் எம்.ராஜன், ரி.மட்ரோ, ஆர்.றூகன், கே.பிரபாத், சி.கெய்ரி ஆகியோரும் எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு கல்முனை பிராந்திய இயக்குநர் அருட்தந்தை றவுட்டன் அவுட்ஸ்கோன் உட்பட எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் குழு உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன்போது அனர்த்தம் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு ஆராயப்பட்டதாக எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஊடக இணைப்பாளர் மைக்கல் தெரிவித்தார்.
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago