2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் தொடரும் மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 24 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக  மாவட்டத்திச் சில பகுதிகளின் இயல்பு நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைவிட சில பிரதான போக்குவரத்து மார்க்கங்களும் தடைப்பட்டுள்ளன. அந்தவகையில் கிரான் - புலிபாய்ந்த கல் வீதி, வாகரை -கட்டுமுறிவு வீதி, வெல்லாவெளி - சின்னவத்தை வீதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இவ்வீதிகளின் போக்குவரத்திற்கு மக்கள் உழவு இயந்திரங்களையும் தோணிகளையும் பயன்படுத்தி வருவதோடு, கிரான் வீதிப் போக்குவரத்திற்கு கடற்படையினர் இயந்திரப் படகினைப் பயன்படுத்தி மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இவற்றுக்கு மேலாக மட்டக்களப்பு மாவமட்டத்தின் களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர் கிரான், வாழைச்சேனை, ஓட்டமாவடி, வெல்லெவெளி, பட்டிப்பளை, வவுணதீவு போன்ற பிரதேசங்களிலுள்ள தாழ் நிலங்கள் வெள்ளதில் மூழ்கியுள்ளன இவற்றால் கிராமங்களுக்கிடையேயான போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்ப்ன் வானிலை அவதான நிலையத்தின் தகவல்களின்படி இதுவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 270.7 மில்லி மீற்றர் மழை பெங்துள்ளதாகவும் தற்போது பெய்து வருவது முதலாவது பருவகால மழை இன்னும் இரண்டாவது பருவகால மழை ஆரம்பிக்கவில்லை எனவும் மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின உதவிப் பொறுகப்பதிகாரி ஏ.எம்.சாலின் தெரிவித்துளார்.

இதனைவிட கிரான் பகுதியில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்தவர்கள் பொண்டுகல்சேனை கணபதி வித்தியாலயம், பிரம்படித்Pவு விதியாலயம் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டு பின்னர் இன்று பிற்பகல் தத்தமது வீடுகளுக்குத் திரும்பிவித்தடதாகவுத் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகளையும் உலர் உணவு வகைகளையும் வழங்க மாவட்ட அனர்த முகாமைத்து நிலையம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பரஜன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக இலங்கை இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் இதனைவிட அரச சார்பற்ற அமைப்புக்களும் உதவிவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .