2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

முட்டாள்தனமான அபிவிருத்திக்காக பள்ளிவாசல் சொத்து வீணாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது: காத்தான்குடி நக

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

முட்டாள்தனமான அபிவிருத்திக்காக பள்ளிவாசல் சொத்து வீணாக்கப்படுவதை அனுமதிக்க முடியாதென காத்தான்குடி நகரசபையின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடி குட்வின் சந்தியிலுள்ள கட்டடங்களை சட்டவிரோதக் கட்டடங்களெனக் கூறி காத்தான்குடி நகர சபை நேற்று சனிக்கிழமை உடைத்தது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

'பள்ளிவாசலுக்குரிய சொத்தை பாதுகாப்பது பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல மக்கள் மற்றும் அரசியல்வாதிகளினதும் கடமையாகும்.  கண்டிப்பான அத்தியாவசிய தேவை ஏற்படுமாயின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இவ்வாறான கட்டடங்களை பயன்படுத்தவேண்டிய நிலைமையும் காணப்படுகின்றது.

இந்தக் கட்டிடம் சந்திச் சுற்றுவட்ட அபிவிருத்திக்காக காத்தான்குடி நகரசபையினால் உடைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தெரிவித்துள்ளது. உலகில் சனநெரிசல்மிக்க பகுதிகளில் வீதியின் நடுவிலேதான் சந்திச் சுற்றுவட்ட அவசியத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் குட்வின் சந்தியென்பது சனநெரிசல்மிக்க ஒரு பகுதியாகும். இந்தச் சந்தியின் நடுவில் இந்த சந்திச் சுற்றுவட்டம் அமைக்கப்படாமல் குட்வின் சந்தியை விட்டும் விலகி அமைக்கப்படுகின்றது. இது அத்தியாவசியத் தேவைக்காக அமைக்கப்படவில்லை. அழகுபடுத்தலுக்காகவே இது அமைக்கப்படுகின்றது. அழகுபடுத்தலென்ற ஒரே காரணத்திற்காக பள்ளிவாசல் சொத்தை அழிப்பதை அனுமதிக்க முடியாது. இது முட்டாள்தனமான நடவடிக்கையாகும்.

பள்ளிவாசலுக்கு சொந்தமான இக்கட்டிடத்தை உடைத்தமையானது காத்தான்குடி நகரசபைத் தவிசாளரின் சொந்தத் தேவைக்கான ஒரு பழிவாங்கும் அதிகார துஷ்பிரயோகமாகும்.

இக்கட்டிடத்தை உடைப்பதன் மூலம் தனது சகோதரருக்கு வீதி எடுத்துக்கொடுப்பதற்காகவும் இதில் சுப்பர் மார்க்கெட் ஒன்றை அமைப்பதற்கு மெத்தைப் பள்ளி நிர்வாகம் தனக்கு அனுமதி தரவி;ல்லை என்பதற்காகவுமே காத்தான்குடி நகரசபைத் தலைவர் பழிவாங்கும் நடவடிக்கையாக பள்ளிவாசலின் சொத்தான இக்கடைத்தொகுதியை உடைத்துள்ளார் என்பது தெளிவாக விளங்குகிறது.

இந்த நடவடிக்கையானது காத்தான்குடி நகரசபையின் அதிகார துஷ்பிரயோகமாகும். நகரசபைக்கு அதிகாரம் இருக்கின்றதென்பதற்காக அதை துஷ்பிரயோகம் செய்யமுடியாது. இக்கட்டிடம் உடைப்பதற்கெதிராக சட்டரீதியான பாதுகாப்பை ஏற்படுத்த மெத்தைப்பள்ளிவாசல் நிர்வாகம் தவறிவிட்டது.

இந்தப் பிரச்சினையை முன்னின்று பேசித் தீர்க்கவேண்டிய முழுப் பொறுப்புமுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இந்தப் பொறுப்பலிருந்து நழுவிக்கொண்டுள்ளது.  பள்ளிவாசல் சம்மேளனக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ள காணியானது இந்த மெத்தைப்பள்ளிவாசலுக்குரிய காணியென்பதையாவது சம்மேளனம் நன்றியுடன் நினைத்து  இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்க வேண்டும். இதை சம்மேளனம் செய்யவில்லை' என்றார்.

தொடர்புடைய செய்தி:

*எனக்கு வீடு கட்டுவதற்கு கடைகளை உடைக்கவில்லை: நகர சபை தலைவர்

*காத்தான்குடி நகர சபையினால் கடைகள் உடைப்பு


  Comments - 0

  • Risvi Sunday, 27 November 2011 10:28 PM

    நகரசபையில் இதுபற்றி பேசுவீர்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .