Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 நவம்பர் 28 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
கிழக்கு மாகாணசபை அடுத்த வருடத்திற்கென நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள வருடாந்த இடம்மாற்றம் சுற்றுநிரூபம் மற்றும் தாபன விதிகளுக்கமைய நடைமுறைப்படுத்தப்படாமையால் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென வடக்கு, கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'கிழக்கு மாகாணசபையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான 2012ஆம் வருடாந்த இடம்மாற்றமானது பொதுநிர்வாக சுற்றறிக்கை மற்றும் 1589/30ஆம் இலக்க 20.02.2009ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானியின் விதிகளுக்கு முரணாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான உத்தியோகத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
1.இடம்மாற்ற விண்ணப்பங்கள் சகல திணைக்களங்களிலிருந்தும் பெறப்படவில்லை. (உதாரணம் - உள்ளூராட்சி)
2.வருடாந்த இடமாற்ற சுற்றுநிரூபம் வெளியிடப்பட்ட பின்னர் சில இடமாற்றங்கள் வழங்கப்பட்டமை.
3.இடமாற்றசபையில் பொருத்தமற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், பொருத்தமான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படாமை.
4.இடமாற்றத்தின்போது உத்தியோகத்தர்களின் வயது, பால், குடும்ப நிலைமைகள் கருத்திற்கொள்ளப்படாது உத்தியோகத்தர்களின் செல்வாக்கின் அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை. (உதாரணம் வயது குறைந்தவர்களுக்கு மிக அண்மையிலும் மிகவசதியானதுமான திணைக்களங்களும் வயது கூடியவர்களுக்கு தூர இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓய்வுபெறவுள்ளவர்களும் வதிவிடங்களுக்கு அண்மித்த சேவை நிலையங்களைத் தவிர்த்து தூர இடங்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது)
5.இடமாற்ற மேன்முறையீட்டுச்சபையிலும் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் உண்மையான காரணங்கள் ஆராயப்படாமல் செல்வாக்கின் அடிப்படையில் மாத்திரம் இடமாற்றக் கட்டளைகள் இரத்துச் செய்யப்பட்டும் பிற்போட்டும் உள்ளமை.
இவற்றிற்கு தீர்வு பெறும் பொருட்டு எமது சங்கத்தினால் பிரதிப் பிரதம செயலாளர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருக்கு ஏற்கெனவே இவ்விடமாற்ற சபையைக் கலைத்து புதிதாக நடத்துமாறு எம்மால் கேட்கப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்விடயம் கருத்திற்கொள்ளப்படாமையால் சங்கத்தினால் பிரதிப் பிரதம செயலாளர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
58 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago