2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

இஸ்லாத்தின் பார்வையில் பால் நிலை எனும் தலைப்பில் செயலமர்வு

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


இஸ்லாத்தின் பார்வையில் பால் நிலை எனும் தலைப்பிலான இரண்டு நாள் செயலமர்வு இன்று திங்கட்கிழமை காலை காத்தான்குடியில் ஆரம்பமானது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் காத்தான்குடி பொது நூலக கேட்போர்கூடத்தில் ஆரம்பமான இந்த செயலமர்வு நாளை செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடையவுள்ளது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் ஆரம்பமான இந்த செயலமர்வில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியி சிரேஷ்ட்ட நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் லலினா உடையார் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் நதீரா சாலி, உட்பட காத்தான்குடி மற'றம் காங்கேயனோடை பாலமுனை உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்த உலமாக்கள், சிவில் சமூக பிரதி நிதிகள், முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த செயலமர்வின் விரிவுரைகளை சட்டத்தரணி யூ.எல்.அப்துல் மர்சூக், மற்றும் அஷ்ஷெய்க் றவூப் செயின் ஆகியோர் நிகழ்த்துகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .