2021 ஜனவரி 27, புதன்கிழமை

திவிநெகும திணைக்களம் தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

திவிநெகும திணைக்களம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டும் ஒரு நாள் கருத்தரங்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமுர்த்தி சங்கங்கள், சமுர்த்தி வங்கி சங்க கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள், சமுர்த்தி நிறைவேற்றுக் குழு தலைவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு வாழைச்சேனை சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் தேவமனோகரி பாஸ்கரன் தலைமையில்  இக்கருத்தரங்கு  இடம்பெற்றது.

கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரத்னம், வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, பிரதேச செயலக கணக்காளர் திருமதி சந்திரகலா ஜெயந்திரா ஆகியோர் வளவாலர்களாக கலந்துகொண்டு திவிநெகும திட்டம் தொடர்பாகவும் அதன் மூலம் ஏற்படவுள்ள நன்மைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .