2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பனிச்சங்கேணி, மாங்கேணி மக்களுக்கு முன்னாள் முதல்வர் உதவி

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், ரி.லோஹித்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தங்கியிருந்த கோரளைப் பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாங்கேணி மற்றும் பனிச்சங்கேணி மக்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசத்துரை சந்திகாந்தன் சென்று பார்வையிட்டார்.

இதன்போது இம்மக்களுக்கு நிவாரணமாக, பால்மா, பிஸ்கட் முதலிய உலர் உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.

இவருடன் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்), கோரளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் சுரேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .