2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், 
ரீ.எல்.ஜவ்பர்கான்
 
காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 26ஆவது சமூகத்தை நோக்கிய பயணம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ், வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
 
காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இவ்வைபவம் இடம் பெற்றது. சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் ஹில்மி அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கிமின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர் மற்றும் ஏறாவூர் பிரதேச செயலாளர் எம்.ஹனிபா, காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும் ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி ஏ.ஜ.எம்.அமீன் உட்பட சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முக்கியஸ்த்தர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 
இதன்போது காத்தான்குடியிலும் அதனைச் சூழவுள்ள கிராமங்களையும் சேர்ந்த 350 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சீனி, பால்மா பக்கட் உள்ளடங்கலான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .