2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

'இளைஞர் சேவைகள் மன்றத்தின் மீதான நம்பிக்கை குறைகின்றது'

Kogilavani   / 2013 ஜூலை 21 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

'எதிர்வரும் இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு வேட்பு மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட மாட்டாது என நினைக்கின்றேன். ஏனெனில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்மீது ஆரம்பத்திலிருந்த ஆர்வம் ஈடுபாடும் தற்போது குறைந்து கொண்டு வருகின்றது' என போரதீவுப்பற்று பிரதேசத்தின் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் சு.றஞ்சன் தெரிவிதார்.

போரதீவுப் பற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்ககையில்,

"நாங்கள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றோம். ஆனால் ஆனது ஒன்றுமில்லை. சலுகைகளோ உரிமைகளோ எமக்கு இதுவரை கிடைத்ததில்லை.

நாங்கள் தழிழ் பேசுபவர்கள். இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுக்காகவேனும் ஒன்றுகூடல்களுக்காகவேனும் கொழுப்புக்கு சென்றால் எங்களை அங்கு கவனிக்க யாருமில்லை.

எங்களுக்கு சிங்களம் தெரியாது. சிங்கள உறுப்பினர்களுக்கு உரிய கால நேரத்திற்கு அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றது. தழிழ் பேசும் குறிப்பாக வடக்கு கிழக்கினைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் இளைஞர் நாடாளுமன்ற உறுபினர்கள் ஒதுக்கப் படுகின்றார்கள். கூட்டங்களில் முறையான மொழிபெயர்ப்புகள் வழங்கப் படுவதில்லை.

ஆரம்பத்திலிருந்த ஆர்வம், ஈடுபாடு அனைத்தும் எங்களுக்கு தற்போது குறைந்து கொண்டு வருகின்றது. எமக்கு இதுவரையில் எதுவித வசதி வாய்ப்புக்களும் செய்து தரப்படவில்லை தற்போது இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டங்களுக்கும் அமர்வுகளுக்கும் வருவது மிகமிக குறைந்து கொண்டு வருகின்றது.

அடுத்தமுறை இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு வேட்பு மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட மாட்டாது என நினைக்கின்றேன்.

தற்போது இளைஞர் கழகங்கள் செயலிழக்கும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஏனெனில் இளைஞர் கழகங்களுக்கு உரிய விளையாட்டுத் திடல்கள் இல்லை. விளையாட்டு உபகரணங்களில்லை தேவையான பயிற்சிகளில்லை.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் சேவைகள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கலந்துகொண்ட கூட்டத்தில் அவரிடம் இவைகளை நான் நேரடியாக கூறினேன்.

இளைஞர்களுக்குரிய மேற்படி தேவைகள் அனைத்தும் மிகவிரைவில் பூர்த்தி செய்துகொடுக்கப்படும் என உறுதியளித்தார். அவர் உறுதியளித்து பல மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் ஒரு முன்னேற்றமும் எற்படவில்லை.

இந்த நிலமை இவ்வாறு தொடர்ந்தால் இளைஞர்களாகிய நாங்கள் எவ்வாறு இளைஞர் நாடாளுமன்றத்தினையோ இளைஞர் செயற்பாடுகளையோ மேற்கொள்வது என்று எமக்குத் தெரியாதுள்ளது.

இவையனைத்திற்கும் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர், மாவட்ட இளைஞர் சேவை உதவிப் பணிப்பாளர் போன்றோர்தான் எமது அடிமட்ட பிரச்சனைகளை எழுத்து மூலம் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சக்கும் தெரியப்படுத்தி தீர்வு பெற்றுத்தர வேண்டும்' என அவர் தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--