2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இருவரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

ஆட்களில்லாத நிலையில் பூட்டப்பட்டுக் கிடக்கும் வீடுகளை உடைத்துக்கொண்டு உட்புகுந்து இவர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் இருவரும் பணம், தங்க ஆபரணங்கள், பெறுமதியான வீட்டு உபயோகப் பொருட்களை கொள்ளையிட்டு  அடகு வைத்துள்ளமை மற்றும்  விற்பனை செய்துள்ளமை தொடர்பிலும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் திராய்மடு பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பான  முறைப்பாட்டைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .