2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

தமிழ் மக்கள் வாக்கு பலத்தினை முழுமையாக பயன்படுத்த வேண்டும்: ஜனா

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்

'வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது வாக்கு பலத்தினை சரியான முறையில் முழுமையாக பயன்படுத்துவதன் மூலமே எதிர்காலத்தில் வடகிழக்கில் சகல அதிகாரங்களும் கொண்ட மக்களாக தமிழ் மக்கள் வாழமுடியும்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை  உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரவெட்டி விநாயகர் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றய அவர்,

'இன்று வடமாகாண சபை தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக பார்த்துகொண்டுள்ளன. இந்த தேர்தலில் பல குளறுபடிகளை செய்து அரசாங்க வெற்றி பெறமுயற்சிகளை மேற்கொள்ளும். எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் வெற்றிபெறும்.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு முழுமையாக வாக்களிக்காத காரணத்தினால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அதிகமாக ஆசனங்களை பெறமுடியவில்லை.

கிழக்கில் தமிழ் மக்கள் மிகவும் குறைந்தளவிலேயே தமது வாக்குகளை பதிவுசெய்திருந்தனர்.

எமது முஸ்லிம் சமூகத்தினர் வாக்களிப்பு தினத்தன்று முதல் வேலையாகச்சென்று வாக்களித்துவிட்டே தமது ஏனைய பணிகளை மேற்கொண்டனர். ஆனால் தமிழ் மக்கள் அதில் பெரிதாக அக்கறை செலுத்தாத நிலையே இருந்தது.

வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் ஒரே குறிக்கோளில் வாக்களிக்கவேண்டும். தமிழ் மக்கள் முழுமையாக வாக்களிப்பதன் மூலமே வடகிழக்கில் தமிழ் மக்கள் முழு அதிகாரங்களும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

13ஆவது அரசியலமைப்புச்சட்ட தமிழ் மக்களுக்கு இறுதி தீர்வு அல்ல. அதில் இருக்கும் அதிகாரங்களை நாங்கள் பயன்படுத்தி எமது உரிமையை பெற்றுக்கொள்ளும் இறுதித்தீர்வை நோக்கி பயனிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தலாம். அதனால்தான் இலங்கை அரசாங்கம் 13வது சட்டத்தினை இல்லாமல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X