2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

'மோட்டார் சைக்கிள் பின் ஆசனத்தில் அமரும் பெண்களை சிரமத்திலிருந்து விடுவிக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மோட்டார் சைக்கிள்களின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கங்களுக்கும்; கால்களை வைத்து பயணிக்க வேண்டுமென்ற நடைமுறையை தளர்த்தி இந்த சிரமத்திலிருந்து பெண்களை விடுபடச் செய்யுமாறு கேட்டு காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா ஹம்ஸா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தற்போது மோட்டார் சைக்கிள்களின்; பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கங்களுக்கும்; கால்களை வைத்து பயணிக்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து பொலிஸார் வற்புறுத்தி வருகின்றனர்.

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

காத்தான்குடி பிரதான வீதியினால் மோக்ட்டார் சைக்கிள்களின்; பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் முஸ்லிம் பெண்களை கட்டாயமாக இரண்டு கால்களையும் இரண்டு பக்கமும் போட்டுச் செல்ல வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் வற்புறுத்தி வருகின்றனர்.

முஸ்லிம் பெண்களில் பெரும்பாலானவர்கள் அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து செல்பவர்கள். இவ்வாறு அபாயா, ஹிஜாப் உடையணிந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் மோட்டர் சைக்கிள்களின் பின் ஆசனத்தில் இரண்டு பக்கங்களுக்கும் கால்களை வைத்து பயணிப்பது என்பது முஸ்லிம் பெண்களுக்கும் சாரி அணிந்து செல்லும் ஏனைய பெண்களுக்கும் சிரமமாக இருக்கும்.

எனவே இவ்விடயம் தொடர்பாக தங்களிடம் தொலைபேசியில் நான் கதைத்துள்ளதுடன், தங்களின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன்.
எனவே இந்த நடைமுறையை தளர்த்தி இந்த சிரமத்திலிருந்து பெண்களை விடுபடச் செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .