2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

'திருவாசகத்தை' திருடியவருக்கு விளக்க மறியல்

Kanagaraj   / 2013 ஜூலை 26 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கோயிலில் இருந்த திருவாசகம் என்ற நூலையும்  நாக கன்னி உருவச் சிலையையும் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காவலாளியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் காவலாளியான ஞானசேகரன் சிவராஜ் என்பவரையே ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

புதன்கிழமை இரவு ரோந்து சென்ற ஏறாவூர் பொலிஸார் வீதியால் வந்து கொண்டிருந்த மேற்படி நபரைச் சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது அவரிடமிருந்து திருவாசகம் என்ற நூலையும் நாக கன்னி உருவச் சிலையையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேற்படி சந்தேக ஏறாவூர் ஐயன்கேணி புகையிரதக் கடவையோரத்திலுள்ள சிறிய கோயிலில் இருந்தே இதனை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்தே குறித்த சந்தேகநபரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--