2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லவிருந்த மூவர் கைது

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்குரிய ஏற்பாடுகளுடன் பதுங்கியிருந்த மூவரைத் தாம் கைதுசெய்து இருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி எனுமிடத்தில் வைத்து இவர்கள் மூவரும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதானவர்கள் மூவரும் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழக்கிலிருந்து கடல் மார்க்கமாக இவர்கள் அவுஸ்திரேலியா நோக்கிய கடற்பயணத்தை மேற்கொள்ள உத்தேசித்திருந்தனர் என்றும் விசாரணையின் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடிவடிக்கைகளை தாம் மேற்கொண்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--