2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை

Super User   / 2013 ஜூலை 31 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடமை நிமித்தம் சென்று உயிரிழந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய வயதெல்லை வரை மாதாந்த சம்பளத்தினை தொடர்ந்து வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர்களின் குடும்பத்தி; கஷ்ட நிலையினை போக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினாலே இந்த கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளருக்கு கடிதமொன்றை  அனுப்பி வைத்துள்ளது
இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கடமை நிமித்தம் கொழும்பில் இடம்பெற்ற 'ரட்ட விருவோ' பயிற்சிப் பட்டறைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனம் கடந்த ஜுலை 12ஆம் திகதி மன்னம்பிட்டியில் வைத்து விபத்துக்குள்ளானது.

இதனால் மூன்று பேர் உயரிழந்தனர். இவர்களுக்கான மதாந்த சம்பளம் தொடர்ந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் சமுர்த்தி உத்தியோகத்தர்களை திவிநெகும திட்டத்தினுள் உள்வாங்கும் திட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது மாதாந்த சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்படுவதாலும் கடமை நிமித்தம் சென்று உரிழந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஓய்வூதிய வயதெல்லை வரை அவர்களுக்குரிய மாதார்ந்த சம்பளத்தினை வழங்கவும்.

இதன்மூலம் குடும்ப உறுப்பினர்களின் கஷ்ட நிலையினை போக்குமாறும்" அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய தலைவர், செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர், வாழைச்சேனை மற்றும் கிரான் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--