2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

போஷாக்கு உணவு தொடர்பில் விழிப்பூட்டல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் போஷாக்கு உணவு தொடர்பாக  விழிப்புணர்வூட்டும் ஊர்வலமும் கண்காட்சியும் இன்று புதன்கிழமை நடைபெற்றன.

கண்காட்சியின்போது பாரம்பரிய உணவுகளும்; கனியுப்புக்கள் நிறைந்த உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டன.  போஷாக்கான உணவுகளை தயாரித்து உட்கொள்வதன் அவசியம் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டன.

மேலும், தாய் பாலூட்டல், குடும்பத் திட்டமிடல், உள நலத்துறை, சிறுபிள்ளை பராமரிப்பு, அபிவிருத்தி, கழிவுப் பொருட்களைக் கொண்டு பசளை தயாரித்தல், வீட்டுத் தோட்டம் செய்தல் போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றியும் இங்கு விளக்கமளிக்கப்பட்டன.

இது தவிர, தொற்றா நோய் பரிசோதனையும் இங்கு இடம்பெற்றது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.திஸநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், வாழைச்சேனை வைத்திய அதிகாரி எஸ்.தட்சனாமூர்த்தி, தாய் சேய் நல வைத்திய அதிகாரி ஈ.சிறிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--