2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளியிலுள்ள சோதையன் கல்காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை  அதிகாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், ஏனையோர் காட்டுக்குள் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மேலும்,  கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கசிப்பு மதுசாரம் 15,000 மில்லிலீற்றர், மதுசாரத் திரவம் (கோடா) 45,000 மில்லிலீற்றர் போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபரை  வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வாகரை பதில் பொலிஸ் பரிசோதகர் ரீ.ஜெயசீலன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இச்சுற்றிவளைப்புச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X