2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு வாழைச்சேனை நாசிவன் தீவு கிராமத்தில் தனியார் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிசாரினாலேயே குறித்த சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இத்துப்பாக்கியானது உள்ளுரில் தயாரிக்கப்பட்டதுடன் அனுமதியின்றி நீண்டகாலமாக மேற்படி சந்தேநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தமக்கு இரகசிய தகலையடுத்து இதனை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை துப்பாக்கியுடன் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருவதாக மேலும் வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--