2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

செல்வ நகரிலுள்ளது மையவாடி காணியல்ல: பிரதேச சபை செயலாளர்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆரையம்பதி செல்வ நகரில் கடந்த வெள்ளிக்கிழமை சிரமதானம் செய்யப்பட்ட காணி கர்பலா கிராம முஸ்லிம் மையவாடி காணியல்ல என்று  ஆரையம்பதி பிரதேச சபையின் செயலாளர் திருமதி.கே.ஜே.அருள்பிரகாசம் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில், ஆரையம்பதி செல்வ நகர் கிழக்கு கிராமத்திலுள்ள காணியொன்றை  கர்பலா கிராம முஸ்லிம் மையவாடி காணியெனக் கூறி கடந்த 18  ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று சிலர் அத்து மீறி நுழைந்து சிரமதானத்தில் ஈடுபட்டதாகதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று திங்கட்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த காணியில் மேற் கொள்ளப்பட்ட சிரமதானம் தொடர்பாக ஊடகங்களில் பல தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காணியானது கர்பலா மையவாடிக்காணியென அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிரமதானம் செய்யப்பட்ட காணியானது கர்பலா கிராம முஸ்லிம் மையவாடிக்காணியென வெளிவந்த செய்திகள் முற்றிலும் பிழையானதாகும்.
இந்த காணியானது முஸ்லிம் மையவாடிக்காணியென அடையாளப்படுத்தப்பட்டோ அல்லது கர்பலா கிராமத்திலோ இந்தக்காணி இல்லை.

ஆரையம்பதி பிரதேச சபை பிரிவில் கர்பலா கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்;கள்  மையவாடியொன்று தேவை என்பதை இதுவரை அரசிடம் கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--