2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஐக்கிய நாடுகள் சபை தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஐக்கிய நாடுகள் சபை தினம் வியாழக்கிழமை கத்தான்குடியில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலத்திலுள்ள காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் ஏற்பாட்டில் கல்லூரியில் ஐக்கிய நாடுகள் சபை தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனையொட்டி பாடசாலையின் நூலக கேட்போர் கூடத்தில் கல்லூரியின் அதிபர்  யு.எல்.ஏ.முபாறக் தலைமையில் ஐக்கிய நாடுகள் சபை தின வைபவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரையாளர் ஏ.யோகராஜா கலந்துகொண்டு ஐக்கிய நாடுகள் சபை பற்றியும் அதன் நோக்கம், செயற்பாடுகள் தொடர்பாகவும் சிறப்புரையாற்றினார்.

இந்த வைபவத்தில் கல்லூரியின் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் மற்றும் உயர்தரப் பிரிவு ஆசிரியர்கள் கலந்துகொண்டதுடன் ஐ.நா. சபை தொடர்பான போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் இதன் போதுவழங்கப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--