2026 ஜனவரி 14, புதன்கிழமை

கழுத்தில் சுற்றிய பாம்புடன் வைத்தியசாலைக்கு சென்ற நபர்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் பிரதேச வைத்தியசாலைக்கு  ஒருவர் பாம்புடன் வந்ததாக அந்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை ஒரு மணியளவிலேயே மேற்படி நபர் பாம்புடன் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

ஈச்சிலம்பற்று கிண்ணையடியைச் சேர்ந்த 27 வயதான எஸ்.கோபு என்பவரே வளலைப் பாம்புடன் வைத்தியசாலைக்கு வந்தார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (26) இரவு இவர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, இந்த வளலைப் பாம்பு அவரது கழுத்தைச் சுற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து உடனே பாம்பை கழுத்தை விட்டுப் பிரித்தெடுக்க முயற்சித்தார்.  அத்தருணத்தில் பாம்பு அவரது கையை சுற்றிப்பிடித்துள்ளது.

கடும் முயற்சியின் பின்னர் கையிலிருந்து பாம்பைப் பிரித்தெடுத்து போத்தல் ஒன்றினுள் போட்டு அடைத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு மேற்படி வந்ததாகவும் அவர் கூறினார்.

பட்டவுடன் விஷம் ஊடுருவும் இந்த வித வளலை இன விஷப் பாம்பினால் அவர் பாதிக்கப்படவில்லை என்றபோதிலும், அவரை உடனடியாக திருகோணமலை வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .