2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பாவனைக்குதவாத உணவுப் பொருள்கள் மீட்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பின் நகரில் உள்ள உணவு விடுதியொன்றிலிருந்து பெருமளவான பாவனைக்குதவாத பொருட்களை மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று வியாழக்கிழமை (05) மாலை மேற்கொண்ட திடீர் தேடுதலின் போதே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் த.மணிமாறன் தலைமையில் சென்ற பொதுச்சுகாதார குழுவினரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு அரசடிப்பகுதியில் சுகாதாரத்துக்கு கேடான முறையில் உணவுப்பொருட்கள் மற்றும் உணவு விடுதியை நடத்தியவருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சுகாதாரமற்ற மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்களை வைத்திருந்தல்,சுகாதாரமற்ற ரீதியில் உணவு விடுதியை வைத்திருந்தல் தொடர்பில் உணவு விடுதி உரிமையாளருக்கு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா ஆறாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தார்.

மட்டக்களப்பில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் உணவு விடுதிகளில் சுகாதாரத்தினை பேணும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் த.மணிமாறன் தெரிவித்தார்.

சுகாதார மற்ற முறையில் செயற்படும் அனைத்து உணவு விடுதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள், எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுவந்த நிலையிலும் சிலர் அவற்றை கவனத்தில் கொள்ளாமல் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--