2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ஏறாவூரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2014 மார்ச் 29 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹூஸைன்


ஏறாவூரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம் தாரிக் வெள்ளிக்கிழமை(28) தெரிவித்தார்.

மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  கடந்த ஒரு வாரத்திற்குள்  ஆறுபேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், டெங்கு பரவுவதைத் தடுப்பதற்காக உடனடியாக அமுலாகும் விதத்தில் எல்லா மட்டங்களிலும் அவசிய அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"ஏறாவூர் நகரின் பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்புகளை அழிக்கும் புகை விசிறல்  நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

மேற்பார்வை பொதுச் காதாரப் பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல் மற்றும் வெளிக்கள பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.முஹைதீன் தலைமையிலான குழுவினர் இந்த புகை விசிறல் மற்றும் அடையாளங்காணப்பட்ட டெங்கு பிரதேசங்களில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினரினரதும் உதவி பெறப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு விழிப்புக் குழுக்களுக்கு உதவக் கூடியவர்களை அணிதிரட்டி சமூகத்தை விழிப்புணர்வூட்டும் செயற்பாடு இடம்பெறுகின்றது.  

சாக்கடைகளையும், குப்பை கூளங்களையும் அகற்றி நகரை முழுமையாகச் சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இத்துடன் டெங்கு நுளம்பு அழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வீடுகளுக்குள்ளேயும் புகை விசிறப்படுகின்றது.

இதுவரை காலமும் வீதிகளிலேயே புகை விசிறப்பட்டு வந்தது. இதற்கு ஏதுவாக குடியிருப்பாளர்கள் தத்தமது வீட்டுக்கதவுகள், ஜன்னல்கள், பீரோக்கள் என்பனவற்றைத் திறந்து வைத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.

வீட்டுச் சூழல் தகுந்த முறையில் பராமரித்துப் பாதுகாக்கப் படாமல் காணப்பட்டால் அவ்விடத்தில் வைத்தே சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழி வகைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூடவே பொதுமக்களுக்கான சுகாதார விழிப்புணர்வூட்டல் கருத்தரங்குகளும் இடம்பெறும். என்றும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் கருத்து தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .