2021 மார்ச் 03, புதன்கிழமை

சிறுமியர் இருவர் வல்லுறவு: சிறுவன் கைது

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவு, பாலமுனை பிரதேசத்தில் தரம் நான்கில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை வல்லுறவுக்குட்டுபடுத்திய அதேவேளை, மற்றுமொரு மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் 18 வயது சிறுவனொருவனை காத்தான்குடி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (1) கைதுசெய்துள்ளனர்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த மேற்படி சிறுவன், பாலமுனை பிரதேசத்திலுள்ள சிறுமியொருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ள அதேவேளை, மற்றுமொரு சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதைனையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க ஆகியோரின் ஆலோசனையுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் சிறுவர் பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் திருமதி கிருபை ராணி யோகராசா தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் விசாரணைகளை நடத்தியதுடன் குறித்த இளைஞனையும் செவ்வாய்க்கிழமை(1) கைதுசெய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் மட்டக்களப்பு போனதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .