2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூர் துப்பாகி, ரவைகள் மீட்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, வாகனேரி பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை செவ்வாய்க்கிழமை (8) மீட்டுள்ளதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு அடி ஐந்து அங்குல நீளம் கொண்ட துப்பாக்கி, 2 மெகசின்கள், 25 துப்பாக்கி ரவைகள், (25) டூள் செட் என்பன இதன்போது மீட்கப்பட்டன.

வாகனேரி குடாமுனைக்கல் மாந்திராறு எனும் காட்டுப் பகுதியில் துப்பாக்கி ஒன்று கிடப்பதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய புலனாய்வுத்துறை உத்தியோகத்தர்களான எம்.பி.எம்.தாஹா மற்றும் டபள்யூ.எம்.எல்.எஸ்.பண்டார ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லாள் செனவிரத்னவின் வழிகாட்டலில் துப்பாக்கியும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--