2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கடதாசி ஆலைக்கு நிலுவைப்பணம் ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடந்த இரு தினங்களாக ஆலை ஊழியர்கள் மற்றும் நிர்வாகங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் முரண்பாடு தொடர்பில் அரச வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சின் செயலாளருடன் வெள்ளிக்கிழமை (11) தான்  தொடர்புகொண்டு நிலவரங்களை தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

இதன்போது திறைசேரியூடாக 30 மில்லியன் ரூபா நிலுவைப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தன்னிடம் தெரிவித்ததாகவும் பொன் செல்வராசா கூறினார்.

 கடந்த புதன்கிழமை நிலுவையாகவுள்ள சம்பளப்பணம் ஒரு சில ஊழியர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது.  இதனால், ஆத்திரமடைந்த ஏனைய ஊழியர்களுக்கும் சம்பளப் பணத்தை பெற்றவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.  கைகலப்பினால் 2 பேர் காயமுற்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை பற்றி அமைச்சின் செயலாளரிடம் தெரியப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த செயலாளர், முரண்;பாடுகள் தொடர்பில் தனக்கு இதுவரை எதுவித தகவலும் கிடைக்கவில்லை எனவும்; ஆனால், அங்கு பல மாதங்களாக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்கின்றமை பற்றி பலர் தன்னிடம் தெரிவித்தனர். இதன் பிரகாரமும் அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாகவும் அமைச்சரின் அனுமதியுடன் 30 மில்லியன்  ரூபா பெற்று அப்பணத்தை நிலுவையாகவுள்ள சம்பளத்தை பெப்ரவரி மாதம் இறுதிவரை கொடுக்குமாறு கையளித்திருந்ததாகவும் கூறினார்.

அதற்;கு பின்னர் அங்கு நடந்த நிலவரம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனவும்  இவ்விடயம் பற்றி விரிவாக ஆராய்வதாகவும் ஏனைய பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குமான சம்பளம் கொடுப்பதற்குரிய நடவடிக்கையை தாம் மேற்கொள்வதாகவும் அவர் கூறியதாக பொன் செல்வராசா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--