2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

யோகா பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}மட்டக்களப்பு பெரிய ஊரணியில் சக்தி ஆனந்த யோகா பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை(18) இடம்பெற்றது.

சிவசக்தி சிவபாதசுந்தரம் என்பவரால் நடாத்தப்படவுள்ள இந்த யோகா பாடசாலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான யோகா பயிற்சி இடம்பெறவுள்ளது.

இப் பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வில் பாடசாலை பெயர்ப்பலகையை யோகா கீர்த்தி நிபுணர் செல்லையா துரையப்பா திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார், யோகா கீர்த்தி நிபுணர் செல்லையா துரையப்பா, சாம்பசிவம் சிவாச்சாரியார், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, இந்து வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--