2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் சுனாமி அனர்த்த ஒத்திகை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான தேசிய சுனாமி அனர்த்த ஒத்திகை காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 167 ஏ கிராமத்தில் இன்று (24) பிற்பகல் 3.10 மணிக்கு இடம் பெற்றது.

புதிய காத்தான்குடி தெற்கு கிராமதிலுள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கோபுரத்திலுள்ள ஒலி பெருக்கியில் இதற்கான ஒலி எழுப்பப்பட்டதையடுத்து புதிய காத்தான்குடி 167 ஏ கிராமத்திலுள்ள பொதுமக்கள் பதுறியா பாடசாலை மைதானத்திற்கு வருகை தந்தனர்.

இதில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு அலுவலக உத்தியோகத்தர் எம்.அல்தாப், கிராம உத்தியோகத்தர்களான எம்.எம்.ஜரூப், எம்.றசாக், இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தொண்டர்பிரிவு பொறுப்பாளர் எம்.சலீம் உட்பட அனர்த்த முகாமைத்துவ கிராம மட்ட தொண்டர்கள், இராணுவத்தினர்  என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு வருகை தந்த பொதுமக்களை தொண்டர்கள் பதிவு செய்து மைதானத்திற்குள் அமர வைத்தனர்.
சுனாமி அனர்த்த ஒத்திகையின் போது புதிய காத்தான்குடி பதுறியா சுனாமி அன்ர்த்த முன்னாயத்தம் தொடர்பான விழிப்புனர்வுக் கூட்டமும் இதன் போது நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--