2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

தாய்ப்பால் புரைக்கேறியதால் ஒன்றரை மாதக்குழந்தை பலி

Kanagaraj   / 2014 ஜூலை 04 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தாய்ப்பால்  புரைக்கேறியதால் மயில்வாகனம் ஜேசுதன் என்ற ஒன்றரை மாதக்குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரி கே. சுகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வாகனேரி குடைமுனைக்கல் எனும் இடத்தைச் சேர்ந்த குழந்தையின் தாயான கந்தையா தங்கச்செல்வம்  என்பவரிடம் வாழைச்சேனைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர்.

குழந்தை அழுதவுடன் தான் தாய்ப்பாலை அருந்தக் கொடுத்ததாகவும் சிறிது நேரத்தின் பின் குழந்தை அழுகையை நிறுத்திய பொழுது,

குழந்தையைத் தான்  உற்றுக் கவனித்ததாகவும் அப்பொழுது குழந்தை சுவாசமற்று இருந்ததாகவும் பின்னர் குழந்தை உயிரிழந்திருப்பதைத் தான் உணர்ந்து கொண்டதாகவும் பொலிஸாருக்கு  அவர் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை கரடியனாறு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கே. சுகுமாரால் இன்று 04.07.2014 நடத்தப்பட்டது.

தாய்ப்பால் பால் புரைக்கேறியதால் குழந்தை மூச்சுத் திணறி மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .