2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

செங்கலடியில் காட்டுயானைகளின் அட்டகாசம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி நகர்ப்புறத்தை அண்மித்த மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் இன்று (18) அதிகாலை நுழைந்த காட்டு யானைக்கூட்டமொன்று கரும்பு, வாழை மற்றும் தென்னை போன்ற பயிர்களை அழித்து  நாசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தோட்டச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செங்கலடி வைத்தியசாலைக்கு முன்பாக, மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளதால் அப்பிரதேச மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த காலங்களில் வயல் மற்றும் வயல் சார்ந்த பிரதேசங்களிலேயே காட்டுயானைகள் அட்டகாசம் புரிந்தன.

தற்போது பொதுமக்கள் செறிந்து வாழும் நகரை அண்மித்த பகுதிக்குள் காட்டு யானைகள் வரத் தொடங்கியுள்ளமை துரதிர்ஷ்டவசமானதென தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .