2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கணவன் இறந்த அதிர்ச்சியில் இறந்த மனைவி

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


கணவன் இறந்ததைப் பார்த்த உடனே மனைவியும் அதிர்ச்சியில் இறந்து போன துயரச் சம்பவமொன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் இடம்பெற்றுள்ளது.

எட்டுப் பிள்ளைகளின் பெற்றோரான கணவர் பூபாலபிள்ளை கனகரெத்தினம் (வயது 77), மனைவி கனகரெத்தினம் இராசம்மா (வயது 70) ஆகிய தம்பதியரே ஒரேநாளில் இறந்துள்ளனர்.

இந்த துயரமான சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றது இருவரினதும் நல்லடக்கம் உப்போடை மயானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.  இவ்விரு சடலங்களும் ஒரே புதைகுழியில் அருகருகே புதைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .