2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வீதி விபத்தில் ஒருவர் பலி

Thipaan   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற வீதி விபத்தில், ஒருவர் உயிரிழந்ததாக  மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி வண்டி மோதியதாலேயே இவ் வயோதிபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், களுவாஞ்சிகுடி குமரன் கலாமன்ற வீதியைச் சேர்ந்த காளிப்பிள்ளை அரசரெட்ணம் (வயது 56) என்பவராவாரர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பாக முச்சக்கர வண்டிச் சாரதியை கைது செய்துள்ள களுவாஞ்சிக்குடி பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .