2021 மார்ச் 01, திங்கட்கிழமை

உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியிலுள்ள சில சமூகசேவை நிறுவனங்கள், குர்ஆன் பாடசாலைகளுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்;.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  நேற்று வியாழக்கிழமை மாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக்,  காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், காத்தான்குடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதியமைச்சர் எம்.எல்;.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நாடாளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட 600,000  ரூபாய் நிதியிலிருந்து காத்தான்குடியிலுள்ள சமூகசேவை நிறுவனங்கள், குர்ஆன் பாடசாலைகள் என 11 நிறுவனங்களுக்கு கணினிகள் மற்றும் பாய்கள், கதிரைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .