2021 மே 18, செவ்வாய்க்கிழமை

5கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Gavitha   / 2015 ஜனவரி 31 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம், வா.கிருஸ்ணா, ஜே.எப்.காமிலா பேகம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், விற்பனைக்காக கொண்டு சென்ற கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.


மேலும் இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கஞ்சா வியாபாரம் இடம் பெருவதை குறைக்கும் வகையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகேவின் வழிகாட்டலில் விஷேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.


அந்த வகையில் கும்புறுமூலை பிரதேசத்தில் வைத்து சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை பரிசோதனை செய்யும் போதே, முச்சக்கர வண்டியில் ஏறாவூர் பகுதியில் இருந்து வாழைச்சேனை பிறைந்துரைச்சேனைக்கு கொண்டுவரப்பட்ட ஐந்து கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அந்த கஞ்சாவை கொண்டு வந்த பெண் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .