2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பல்கலை விரிவுரையாளர்கள் வீட்டில் பெற்றோல் குண்டு தாக்குதல்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின்; வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை (01)  இரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, செல்வநாயகம் வீதியில் 3ஆம் குறுக்கு வீதியிலுள்ள விரிவுரையாளரின் வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் காரணமாக வீட்டின் முன்பகுதியில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகிய இருவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .