2021 மார்ச் 04, வியாழக்கிழமை

மின்னொழுக்கினால் வீடு தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 28 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர்முனைக் கிராமத்தில் தகரங்களிலான வீடொன்று மின்னொழுக்கு காரணமாக நேற்று திங்கட்கிழமை மாலை தீக்கிரையாகியுள்ளது.

வீட்டுக்கு வெளியில் வீட்டு உரிமையாளர்கள் இருந்தபோது திடீரென்று மின்னொழுக்கு ஏற்பட்டு வீடு எரிந்ததாகவும் பின்னர், பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

இது தொடர்பில் மின்சாரசபை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் வந்து மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .